India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான தி.மலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தி.மலை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.
செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சி வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் நேற்று மதுபானக்கடை ஜன்னலை உடைத்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான திவான், பூவரசு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அடுத்த பட்டதாரி பகுதியைச் சேர்ந்த பிரேம் என்ற ஊராட்சி தலைவர் லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்ததாக அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். வட்டாட்சியர் மஞ்சுளா ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் பிரேம் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை ஜூன் 2,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தால் ஜுலை13ல் நடத்தப்படவுள்ள குரூப் 1 தேர்விற்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்விக்குழுமத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்று தி.மலை, எஸ்.கே.பி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை தி.மலை மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள மாமண்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது குகைக்கோயில். இக்குகைகள் இயற்கையாக அமைந்த குன்றினை இணைத்து ஏற்படுத்தப்பட்ட பெரிய ஏரியின் கரைகளின் மீது அமைந்துள்ளன. தேசிய சின்னமான இதில் காணப்படும் கல்வெட்டுகளில், ஏழாம் நூற்றாண்டின் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது.
போளூர் அடுத்த கேளூர் சந்தைமேட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள், கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறிச் சந்தை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.
செய்யாறு அருகே கீழ்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி ரேவதி. இவர் தனது மகன் சூர்யாவுடன் செய்யாறு – வந்தவாசி சாலையில் நேற்று(மே 31) மாலை பைக்கில் சென்றார். அப்போது பின்னால் வந்த பால் டேங்கர் லாரி மோதியதில், ரேவதி சக்கரத்தில் சிக்கி பலியானார். பலத்த காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனக்காவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.