India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் மக்களவைத் தொகுதியில்
ஜோலார்பேட்டை தொகுதி
மின்னணு வாக்கு சுற்று -4
திமுக – 3705
அதிமுக – 2294
நாதக – 829
பிஜேபி – 1421
திமுக முன்னிலையில் உள்ளது
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். தி.மலை தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் முன்னிலையில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு அறைகளில் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறைகளை ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் சீல்கள் உடைக்கப்பட்டு வாக்கு பதிவு இயந்திர அறைகளை தற்போது திறக்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 74.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-டன் இணைந்திருங்கள்.
திருவண்ணாமலை ஊரக வளர்ச்சித் துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிப் பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர்கள் 9 நபர்களுக்கான பணி நியமன ஆணையை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப் மற்றும் துறை அலுவலர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரடியாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளை ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை காண முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு அடுத்த கிழக்குமேடு பகுதியில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக கொடி கம்பம் அமைக்க முயன்ற 6 பேர் மீது மேலே இருந்த மின் கம்பத்தில் கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக பட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவா்கள் ஜூன் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விவரங்களுக்கு, திருவண்ணாமலை அரசு தொழில்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையம், ஜமுனாமரத்தூர் அரசு தொழில்பயிற்சி நிலைய மையங்களை அணுகலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், அருணகிரிமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த நம்மந்தங்குட்டை கிராமத்தில் வசிப்பவா் ரஞ்சினி பூமிநாதன். விவசாயியான இவா் தனது நிலத்தில் பசு மாட்டை கட்டி வைத்திருந்தாா்.
இந்த நிலையில், நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதில், நிலத்தில் கட்டி வைத்திருந்த பசு மாடு இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தது.
Sorry, no posts matched your criteria.