Tiruvannamalai

News June 5, 2024

திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

வாக்களித்த பொது மக்களுக்கு C.N.அண்ணாதுரை நன்றியை தெரிவித்தார்.

image

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி. என். அண்ணாதுரை அவர்கள் தனக்கு வாக்களித்த வாக்காளர் பொதுமக்களுக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மீண்டும் மக்கள் பணியாற்றிட வாய்ப்பு தந்தமைக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

News June 5, 2024

திருவண்ணாமலை தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் சி. என். அண்ணாத்துரை- 5,47,379 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்- 3,13,448 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்- 1,56,650 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு- 83,869 வாக்குகள்

News June 5, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

புதிய ரேஷன் கார்டுகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(ஜூன் 5) முதல் புதிய ரேஷன் கார்டுகள் பெற விண்ணப்பம் செய்து உடனே பயன் பெறலாம். பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிய குடும்ப அட்டைக்களை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 5, 2024

தி.மலை மாணவி அகில இந்திய அளவில் முதலிடம்

image

திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த தபால் துறை அலுவலர் மணிகண்டனின் மகள் எம்.ஜெயதி பூர்வஜா, நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி ஜெயதி பூர்வஜா 720/720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பூர்வஜாவுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News June 5, 2024

சட்டப்பேரவை து.தலைவரை சந்தித்த வெற்றி வேட்பாளர்

image

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து நேற்று(ஜூன் 4) தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

News June 4, 2024

திருவண்ணாமலை:வெற்றி கனியை ஈட்டிய திமுக

image

திமுக வெற்றி 2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி. என். அண்ணாத்துரை 5,16,684 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்2,97,024 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 1,50,011 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 78506 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.

News June 4, 2024

23 வது சுற்றில் 231999 வாக்குகள் வித்தியாசம்

image

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் 23 வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் 542236,
அதிமுக வேட்பாளர் 310237, பாஜக வேட்பாளர் 154280, நாதக வேட்பாளர் 82807 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் விட திமுக வேட்பாளர் 231999 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார்.

News June 4, 2024

ஆரணி 15 ஆவது சுற்று முடிவுகள்

image

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 15 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 3,53,859 வாக்குகளும், அதிமுக – 2,09,096 வாக்குகளும், பாமக – 1,70,960 வாக்குகளும், நாதக- 47,722 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 1,44,763வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

error: Content is protected !!