India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

தி.மலை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

குஜராத், ஆனந்த் மாவட்டத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம் கோயில்களுக்கு சென்றுவிட்டு வேனில் வந்தவாசியை அடுத்த பொன்னூரில் உள்ள கோயிலுக்கு நேற்று சென்று கொண்டிருந்தனா். இந்த வேன் வெண்குன்றம் அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 6 பேர் வந்தவாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வந்தவாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜவ்வாது மலையடிவாரத்தில் மேல்வன்னியனூரில், சில தினங்களுக்கு முன்பு 4 கன்று குட்டிகள் & 2 நாய்களை மர்ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. மேலும், நேற்று முன்தினம் கிடாம்பாளையம், வதியன் கோட்டையில் கன்று குட்டிகளை கடித்து கொன்றுள்ளது. இறந்த விலங்குகளில் புலியின் தடயங்கள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (13.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். தாலுக்கா வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தனி தொலைபேசி எண் இங்கே வழங்கப்பட்டுள்ளது தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.