Tiruvannamalai

News January 16, 2026

தி.மலை: சிலிண்டர் மானியத்தை எளிதாக அறிய – CLICK

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

தி.மலை: கன்றுக்குட்டியை கடித்து குதறிய மர்ம விலங்கு!

image

திருவண்ணாமலை ஜவ்வாது மலையடிவாரத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான விலங்கு ஒன்று அங்குள்ள கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இந்த நிலையில் நேற்று, எடப்பரை பெரிய மலை அடிவாரத்தில் கன்றுக்குட்டியும் இதேபோல கொல்லப்பட்டிருந்தது. இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருக்க வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News January 16, 2026

தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News January 16, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4)குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5)முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7)பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 16, 2026

தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தி.மலை வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News January 16, 2026

தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

தி.மலை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News January 16, 2026

தி.மலை: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

image

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 15, 2026

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News January 15, 2026

தி.மலை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2026

BREAKING: வந்தவாசியில் பயங்கர விபத்து.. 2 பலி!

image

தி.மலை மாவட்டம், வந்தவசி அருகே இன்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். பொங்கல் தினத்தன்று நடைபெற்ற இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!