India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கபட்டுள்ளது.
புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு, வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வேலூரில் இருந்து 50, திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பௌர்ணமி நாளை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. பக்தர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதற்காக TN-Alert என்ற மொபைல் செயலி மூலம் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை மக்கள் தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் பகுதி பேரிடர் தொடர்பான புகார்களை 1077 அல்லது 04175232377 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறையால் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதில் நேற்று சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். மேலும் கடந்த மூன்று நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் வருகின்ற 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் நவம்பர் 09, 10, 23, 24 ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களும் நடைபெறும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
போளூர் படவேடு செண்பகத்தோப்பு அணை நீர் கிடுகிடுவென நிரம்பி வருவகிறது. 62 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 55.37 அடி உயரம் நீர் நிரம்பி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்நேரமும் அணை திறக்கப்படலாம். கமண்டல நாகநதி ஆற்றின் கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போளூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதற்காக TN-Alert என்ற மொபைல் செயலி மூலம் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் பகுதி பேரிடர் தொடர்பான புகார்களை 1077 அல்லது 04175232377 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.
தி.மலை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 182 பலதரப்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் 20.10.24 முதல் 22.10.24 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது ஏலம் நடைபெறுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலம் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் 18% ஜிஎஸ்டி சேவை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.