India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆரணி எம்.பி. தரணிவேந்தன் செய்யாறு எம்எல்ஏ ஜோதி ஆகியோர் சிறுவர்களின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
போளூர் வட்டம், ஜவ்வாது மலை அடிவாரம் அத்திமூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கோடை விடுமுறைக்குப்பின் இன்று மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரார்த்தனை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணாக்கர்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டு செயல்பாடுகள், அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினர்.
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அ.விஜயன் – ந. சங்கீதா இணையரின் திருமண விழா இன்று நடைபெற்றது. குறிஞ்சி இல்லத்தில் நடந்த இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பூங்காவனம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பாக நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள், ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் விக்ரமன், அன்பால் அறம் செய்வோம் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவியை தொடா்ந்து பெற ஜூன் 15 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தும், இ-கே. ஒய். சி செய்து முடித்தும் பயன்பெறலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஹரிகுமார் தெரிவித்துள்ளாா். 1 399 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தமான ஆவணங்களை இணைக்காமல் உள்ளனா். இவா்கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகலாம்.
தமிழக அரசு சாா்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் ஆண்டுக்கு 2 முறை கோமாரி நோய்த் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜூன் 10) முதல் நடைபெறும் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்தில் திடீரென இன்ஜினில் தீ பற்றிய நிலையில் உடனடியாக மாணவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பள்ளி பேருந்தில் தீபற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சாா்பில் 1040 நகரப் பேருந்துகள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைக் காண்பித்து நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போளூர்,படியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் நேற்று கலசப்பாக்கம் அருகே உள்ள நாயுடு மங்கலம் பகுதிக்கு சென்று பின்னர் வீடு திரும்பிய போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த நெடுஞ்செழியன் தி.மலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நேற்று நடைபெற்றது. இதில்மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவ பொம்மையின் தொடை பகுதியை பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா் கதாயுதத்தால் தாக்கி பிளக்கும் காட்சி நடித்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.