Tiruvannamalai

News June 15, 2024

தி.மலை: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

செய்யாறு அடுத்த தொழுப்பேடு மதுரா கொழம்பாடியில் தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்தது.  குடிசை வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு செய்யாறு எம்எல்ஏ ஜோதி நிவாரண பொருட்களை வழங்கினார்.  நிவாரண பொருள்களுடன், ரூ.5 ஆயிரம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.  இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஞானவேல், முக்கூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் திருமால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

News June 15, 2024

தி.மலை: திறன் மேம்பாட்டு கூட்டம்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் நேற்று மாலை திறன் மேம்பாட்டு கூட்டம் ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தியாகராஜன்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் பி. தனசேகரன், ஜெய்சங்கர், துரைமுருகன் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

திருவண்ணாமலை: வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக் கல்வித் தகுதியுடைய ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.in.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் தி.மலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

எரியாத மின் விளக்குகள் – கோரிக்கை

image

மேல்செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் விபத்துகள் நடைபெறுவதால் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு 1 மாதத்திற்கு மேலாகியும் மின்விளக்கு எரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News June 14, 2024

அக்னி வீரர்கள் தேர்வு அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம், அக்னிவீர் வாயு (இந்திய விமானப்படை) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு அக்டோபர்18 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளது. ஜூலை 8 முதல் 28ஆம் தேதி வரை http://agbuoatgavayu.cdac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயனடைய மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

தி.மலை: வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு

image

தி.மலை மாவட்டம், சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு முத்திரை சொத்துக்கள் சந்தை மதிப்பு வருவாய் கிராமங்கள் வாரியாக தி.மலை மாவட்டத்தில் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருப்பின் மதிப்பீட்டு குழுவிற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

தி.மலை: நள்ளிரவில் போதை விருந்து

image

திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் தங்கியிருந்து போதை பொருட்களை பயன்படுத்தி விருந்து நிகழ்ச்சி நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெண் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் ரஷிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

News June 13, 2024

மஞ்சப்பை பயன்படுத்த நடவடிக்கை தேவை

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் பெரும்பாலான கடை விற்பனையாளர்கள் பூக்கள், அர்ச்சனை பொருட்கள் மற்றும் இதர தேவைக்கு பிளாஸ்டிக் பைகளையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதை முற்றிலும் ஒழித்து மஞ்சப்பை பயன்படுத்துவதற்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இன்று(ஜூன் 13) கோரிக்கை வைத்துள்ளனர்.

News June 13, 2024

தனியார் பள்ளியை கண்டித்து சாலை மறியல்

image

செங்கம் தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட தற்போது கட்டாய கல்வி சட்டம் ஆர்டிஐ மூலம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் கடந்த ஆண்டு கல்வி கட்டணத்தை விட 5 மடங்கு கேட்டுள்ளனர். இதனை கண்டித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குப்பநத்தம் போளூர் சந்திப்பு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து செங்கம் போலீசார் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

News June 13, 2024

அரசு கல்லூரி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கலெக்டர் ஆய்வு.

image

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் இன்று (13.06.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!