Tiruvannamalai

News June 18, 2024

தலைமை ஆசிரியரின் நகை திருட்டு – நீதிமன்றத்தில் மனு

image

போளூர் வட்டம் கேளூர் கிராமத்தைச் சேர்ந்த புளோரி அந்தோணியம்மாள் என்ற தலைமை ஆசிரியர் விபத்தில் காயம் ஏற்பட்டு அத்திமூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது அவருடைய கழுத்தில் இருந்த ஏழு சவரன் தாலி செயின் திருடு போனது. இச்சம்பவம் தொடர்பாக போளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், போளூர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

News June 17, 2024

இணையதளம் வாயிலாக நடத்தப்படும் அக்னிவீர் வாயு தேர்வு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னிவீர் வாயு தோ்வுக்கான அறிவிப்பு இன்று (ஜூன் 17) வெளியாகி உள்ளது. அதில் இந்த தேர்வு 18.10.2024 முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என்றும், தோ்விற்கு விண்ணப்பிக்க 8.7.2024 முதல் 28.7.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என விமானப்படை தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தோ்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்திலேயே பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 17, 2024

அக்னி வீர் வாயு தேர்வு – ஆட்சியர் தகவல்

image

அக்னி வீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். பட்டப் படிப்பு மற்றும் தொழில் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அக்னி வீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், திருமணம் ஆகாத 3.7.2004 முதல் 3.1.2008 இடையில் பிறந்த ஆண்,பெண் இருபாலரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News June 17, 2024

தி.மலை: ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்

image

ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வரும் 21ஆம் தேதி (வெள்ளி) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

News June 17, 2024

திருவண்ணாமலை: கல்வி உதவித்தொகை பெற விருப்பமா?

image

தி.மலை மாவட்டம்16 முதல் 60 வயதுக்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க வருகிற ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினராக https://tnuwwb.tn.gov.in இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்றினை இணையதளம் மூலமாகவும் பதிவிடலாம் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

News June 17, 2024

தி.மலை வருகை தரும் எல்.முருகன்

image

செய்யாறு வட்டம், கீழ் நெல்லி வேளாண்மை அறிவியல் மையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிருக்கான நலத்திட்ட உதவிகளை நாளை மாலை வழங்குகிறார். இந்த தகவலை கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி மற்றும் மைய தலைவர் சுரேஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

News June 17, 2024

தி.மலை: கஞ்சா விற்ற 5 பேர் கைது

image

தி.மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே உள்ள பூங்காவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த 7.5 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

News June 16, 2024

தி.மலை: கார் விபத்து – 3 பேர் பலி

image

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வந்த கார் நேற்று காலை போளூர் சாலை வசூர் அருகே புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News June 16, 2024

தி.மலை: டேட்டா ஆப்பரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் சார்பில் 2 டேட்டா ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு கணினி பட்டதாரி அல்லது கணினி டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூன் 22.6.2024 மாலை 4 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்ட துணை சுகாதார பணிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூன் 15) அறிவித்துள்ளார்.

News June 15, 2024

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு

image

திருவண்ணாமலை சன்னதி தெருவில் நேற்று இரவு நிறுத்தி இருந்த காரின் முன் இருக்கையில் மண்டை ஓடுகள் அடுக்கப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் வாரணாசி பகுதியில் இருந்து காரில் வந்த அகோரி எனவும், கிரிவல பாதையில் உள்ள ஆசிரமத்தில் தங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

error: Content is protected !!