Tiruvannamalai

News June 21, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

image

திருவண்ணாமலையில் இன்று (ஜூன் 21) பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06127) மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து நாளை (ஜூன் 22) காலை 8 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News June 21, 2024

தி.மலை: திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

தி.மலை மாவட்டத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் அளிக்க அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, ஆதார் அட்டை வழங்க முகாம் ஜூன் 26ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

News June 21, 2024

தி.மலை: கரும்பு விவசாயிகளுக்கு நற்செய்தி

image

தி.மலை மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ள கரும்பை விவசாயிகள் பதிவு செய்யலாம். வேர்ப்புழு தாக்குதலில் கரும்பை பாதுகாக்க மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாய விவகார எல்லை பகுதியில் கரும்பு சாகுபடி செய்து ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பை 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் அளவு

image

தி.மலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணி 60.80 மி.மீ, திருவண்ணாமலை 8 மி.மீ, செங்கம் 26.4 மி.மீ, போளூர் 20 மி.மீ, ஜமுனாமரத்தூர் 37 மி.மீ, கலசபாக்கம் 10 மி.மீ, தண்டராம்பட்டு 14.2 மி.மீ, செய்யாறு 48மி.மீ, வந்தவாசி 54 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 9 மி.மீ, வெம்பாக்கம் 28 மி.மீ, சேத்துப்பட்டு 19 மி.மீ. பதிவானது.

News June 21, 2024

தி.மலை: கிரிவலம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 7.31மணிக்கு தொடங்கி ஜூன் 22 காலை 6.37 மணிக்கு முடிவடையும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக மாநிலம் முழுவதும் 1200 சிறப்பு பேருந்துகள் சென்னை கோயம்பேடு, கிளம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News June 20, 2024

தி.மலை: கிரிவலம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 7.31மணிக்கு தொடங்கி ஜூன் 22 காலை 6.37 மணிக்கு முடிவடையும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக மாநிலம் முழுவதும் 1200 சிறப்பு பேருந்துகள் சென்னை கோயம்பேடு, கிளம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News June 20, 2024

தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு தி.மலை வந்தடையும். மறுமார்க்கமாக தி.மலையில் இருந்து ஜூன்.22 அன்று காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

தி.மலை: லாரி மீது மோதி 2 பேர் பலி

image

திருவண்ணாமலை, செங்கம் அடுத்த சங்கம் பகுதியை சேர்ந்த ராஜ விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் தினகரன் இருவரும் நேற்று நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது பக்ரிபாளையம் அருகே சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் ராஜ விக்னேஷ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தினகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 20, 2024

அரசு தொழில் பயிற்சி மையத்தில் கலந்தாய்வு

image

திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், சிவில், வயர்மேன், வெல்டர், ரோபோடிக்ஸ், டிஜிட்டல், ஆட்டோமேஷன் மற்றும் பல பிரிவுகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 12 பிரிவுகளில் 416 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். கலந்தாய்வு 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என முதல்வர் பொன் தனசேகரன் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

சேத்துப்பட்டில் 36 மி.மீ. மழை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 36.6 மி.மீ. மழை நேற்று பதிவானது. இதுதவிர, போளூரில் 15 மி.மீ, ஆரணியில் 10.8 மி.மீ, செய்யாற்றில் 20 மி.மீ, வந்தவாசியில் 30 மி.மீ, வெம்பாக்கத்தில் 25 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

error: Content is protected !!