Tiruvannamalai

News January 19, 2026

தி.மலை: செவிலியர் துறையில் 999 காலிஇடங்கள் Apply Now!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

தி.மலை மாவட்ட BDO எண்கள் இதான்…!

image

திருவண்ணாமலை மாவட்ட BDO க்களின் அலுவலக எண்கள்: திருவண்ணாமலை -04175-253074, புதுப்பாளையம்- 04188-242432, செங்கம்- 04188-222322, சேத்துப்பட்டு-04181-252229, கலசபாக்கம்- 04181-241222, போளூர்- 04181-222040, துரிஞ்சாபுரம்- 04175-241266, கீழ்பென்னாத்தூர்- 04175-242222, ஆரணி – 04173-226353, வந்தவாசி- 04183-225064, செய்யாறு – 04182-222258, ஜவ்வாதுமலை – 04181-245245 இதை உடனே அனைவருக்கும் SHARE!

News January 19, 2026

தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 19, 2026

தி.மலை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

திருவண்ணாமலை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

தி.மலை: மின் தடையில் உங்க ஏரியா இருக்கா ?

image

மங்கலம், மன்சுராபாத், அவலூர்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யபட உள்ளது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை ஷேர் செய்யவும்.

News January 19, 2026

தி.மலை பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

தி.மலை: பட்டப்களில் செயின் பறிப்பு

image

கண்ணமங்கலம் அருகில் உள்ள முருகாபாடி கிராமத்தில் வசிப்பவர் கனகா(65). இவர் மதிய நேரத்தில் தனது நிலத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 25 வயது உடைய மர்ம நபர் கனகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அதிர்ச்சியில் கனகா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிடும் பயனில்லை. புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News January 19, 2026

தி.மலை: குண்டு வீச்சில் முடித்த பொங்கல் விளையாட்டு!

image

செய்யாறு தாலுகா பெரும்பாலை கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (28) அங்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த இருந்தவர்களிடம் வீண் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கூட்டத்தின் நடுவே பெட்ரோல் குண்டு வீசியதால் 7 பேர் தீ காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் பாலாஜியை தேடி வருகின்றனர்.

News January 19, 2026

தி.மலை அருகே துடிதுடித்து பலி

image

செங்கம்–தி.மலை சாலையில் உள்ள சுண்டைக்காய் பாளையம் சந்திப்பு அருகே நடந்த விபத்தில், பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்ற மேல் கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் (60) மீது பின்னால் வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தில் குமார் (48) காயமடைந்தார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 19, 2026

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் தரிசனம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் (ஜனவரி 18) நேற்று நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா மற்றும் அவரது பெற்றோருடன் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அவர்களுடன் செல்பி செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

error: Content is protected !!