India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, குப்புசாமி நகர், சந்தாநகர் , கிருஷ்ணா நகர் மேல்செங்கம் புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 4.20 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை தெள்ளார் அடுத்த மேல்பாதி கிராமத்தில் வி.பி.ஆர்.சி கட்டிடத்திலும் செப்.3ஆம் தேதி வெம்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், 4ஆம் தேதி வந்தவாசி அடுத்த ஓசூர் நாராயணா திருமண மண்டபத்தில், 5ஆம் தேதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.4-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பி. மதுசூதனன் வெளியிட்ட செய்தி குறிப்பில், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், உதவி ஆலோசகர், அலுவலக உதவியாளர், எழுத்தர் போன்ற பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
செய்யாறு அடுத்த வாழ்குடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 6 பேர் தகராறில் ஈடுபட்டபோது அதனை தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவரை அந்தப் பகுதியில் இருந்த பலர் தாக்கிய வழக்கில் தினேஷ்குமார், பெருமாள், மணிகண்டன், ராஜேஷ், சேதுராமன், பிரசாந்த், ராஜேஷ் ஆகிய 6 பேரை அனக்காவூர் போலீசார் நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் வரும் சனிக்கிழமை 31.8.2024 அன்று மாலை 5 மணி அளவில் திருவண்ணாமலை திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கலசபாக்கம் காவல் நிலையத்தில் நேற்று மாலை வினாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாகவும், விழா எப்படி நடத்துவது என்பது குறித்து தனித்தனியாக நோட்டீஸ் வழங்கி ஆலோசனை கூட்டம் உதவி ஆய்வாளர் தம்பிதுரை தலைமையில் நடைபெற்றது. துரிஞ்சாபுரம் பாஜக ஒன்றிய செயலாளர் யுவராஜ், கலசபாக்கம் பாஜக ஒன்றிய செயலாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், சட்டபேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளரும், ஆரணி எம்.பி-யுமான எம்.எஸ்.தரணிவேந்தன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அப்பகுதியை சேர்ந்த மக்கள், கோவிலை சூழ்ந்திருந்த புதர் செடிகளை அகற்றியபோது, சிவலிங்கம் மற்றும் கொடிமரம் மட்டும் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அதே இடத்தில் பழமை வாய்ந்த சிவலிங்கத்திற்கு இன்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வந்தவாசி தாலுக்கா கீழ் வில்லிவனம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற கூலி தொழிலாளி கடந்த 2019 ஆம் வருடம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையம் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை செய்த போக்சோ நீதிபதி பார்த்தசாரதி, பெருமாளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரயிலின் மூலம் 21 பெட்டிகளில் 1300 மெட்ரிக் டன் யூரியா வந்து சேர்ந்தன. அவற்றை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.