India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தி.மலை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் 77வது குடியரசு தினத்தை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதாரத் துறை சார்பாக, கொழப்பலூர் வட்டார மருத்துவ அலுவலர் M.அருண்குமார் சிறந்த மருத்துவராகவும், மடம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் N.ஆனந்தன் சிறந்த மருந்தாளுனராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மா.சுகாதார அலுவலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க

தி.மலை மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (0417-232619) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

தி.மலை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04175-232474 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

தண்டராம்பட்டு துணை மின்நிலையத்தில் நாளை (ஜன.27) மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பணி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர். நாளாள்பள்ளம், அமந்தபுத்தூர், தென்முடியனூர், நெல்லிக்குப்பம், ராதாபுரம், கீழ்வணக்கம்பாடி, அகரம், தாழனோடை, அல்லப்பனூர், சாத்தனூர் மேலும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மாடுகளை மேய்த்து கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.25) மாடுகள் மேய்த்து கொண்டிருக்க போது ஒரு மாடு கன்னியப்பனை முட்டியது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.