Tiruvannamalai

News July 22, 2024

போளூரில் களைகட்டிய ஆடு வியாபாரம்.

image

போளூரில் வாரம் தோறும் திங்கள் கிழமையில் ஆடு சந்தை நடைபெறுது வழக்கம். இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு போளூர் ஆடு சந்தையில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக போளூர், சந்தவாசல், ஆரணி படவேடு குப்பம், கலசப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

News July 22, 2024

தி.மலை கிரிவலம் சென்ற பக்தர் திடீர் மரணம்

image

தி.மலை, பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கிரிவலம் சென்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஈசானிய மயானம் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பக்தர்கள் அவரை சாலையோரம் அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர். திடீரென மயங்கி கீழே விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபரின் விவரங்களை விசாரிக்கின்றனர்.

News July 22, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை நீட்டிப்பு

image

தி.மலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர உதவித்தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, காலணி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் உரிய கல்விச் சான்றுகளுடன் சேர்க்கைக்கு முதல்வரை தொடர்புகொள்ளலாம்.

News July 21, 2024

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் அனுமதி பற்றி ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.  சாமியை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சரியான முறையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்களா என்று எஸ் பி கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

News July 21, 2024

தி.மலை: இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

தி.மலை: கிரிவலம் – ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்களை பறிமுதல் செய்ய ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆட்டோக்களுக்கு தலா ரூ.20,000 அபராதம் விதித்தும், பக்தர்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

News July 21, 2024

தி.மலை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21.4 செ.மீ மழைப் பதிவு

image

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 21.4 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

திருவண்ணாமலையில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம்.

image

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்தனர். ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

News July 21, 2024

யாசகம் எடுத்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் நேற்று கிரிவலப் பாதையில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிரிவல பாதையில் குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்போரை எச்சரித்தார். மேலும் இது போன்ற யாசகம் பெரும் நபர்களை கண்டறிந்து மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் காவல்துறை மூலம் விசாரணை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

error: Content is protected !!