India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் 4 இடங்களில் நேற்று(ஜூலை 30) நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 3 ஆயிரத்து 562 மனுக்களும், நகா்ப்புறங்களில் நடைபெற்ற முகாம்களில் ஆயிரத்து 267 மனுக்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 829 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். இன்று, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சாத்தனூர் அணையை தூர்வாரி, திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மக்கள் தண்ணீர் அருந்திட வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய ஜல சக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை, புனல்காடு பகுதிக்கு மாற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குப்பை கிடங்கு மாற்றப்படும் இடமான புனல்காடு பகுதியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தில் மக்களை பாதிக்காத வங்கியில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்காத குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களை மடக்கி சில திருநங்கைகள் கட்டாய பண வசூலில் ஈடுபடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.திருவண்ணாமலைக்கு ஆடிக் கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று வருகிறார்கள்.அப்போது பக்தர்களை மடக்கி திருநங்கைகள் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நண்பர்கள் தின விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமையாசிரியர் இராமதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு
விருந்தினராக நாடக ஆசிரியர் கோணலூர் சா.முத்து கலந்துக் கொண்டு கூத்துக் கலைக் குறித்து
மாணவர்களிடம் பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணமங்கலம் ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக நாளை காலை 7:30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மூடியிருக்கும். மேற்குறிப்பிட்ட நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லவும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை நடிகர் தனுஷ் அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்த பின்னர் உண்ணாமலை அம்மனை வணங்கிச் சென்றார். அப்போது அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினர். மேலும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் போளூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டு புதிய கட்டிடத்தை இன்று காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய அலுவலக கட்டிடத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து அலுவலகப் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(ஜூலை 29) சாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சமீபத்தில் இவர் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.