India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வந்தவாசி ஒன்றியம் சலுகை கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமினை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், கிரி உள்ளிட்டோர் இருந்தனர்.
11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருவாண்ணாமலைக்கு மதுமதி என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வார விடுமுறை மற்றும் ஆடி அமாவாசை நாள்களான வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயங்கும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க திட்டமிட்டுள்ளது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனி 60 பேருந்துகள் என 120 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அம்சங்களை வலியுறுத்தி கண்டன முழுக்க கோஷங்கள் எழுப்பி இன்று போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் இந்தியன் வங்கி சாா்பில் கல்விக் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு கடனுதவிகள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், உயா்கல்வி பயிலும் 53 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.60 கோடியில் கல்விக் கடன்கள் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான தொழில் கடன்களை ஆட்சியா் வழங்கினாா்
திருவண்ணாமலை அரசு கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரியில் ஆக., 1,2 ஆகிய 2 நாட்கள் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான 4-ஆம் கட்ட கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. பிஎஸ்சி பட்டப் படிப்பில் கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல் துறைகளுக்கு 1-ஆம் தேதியும், பி.காம், பிபிஏ பொருளியல் பி.ஏ வரலாறு, பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளுக்கு ஆக.2-இல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.
போளூர் அடுத்த சந்தைமேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் சேத்துப்பேட்டை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு பைக்கில் செல்லும் போது முருகாபாடி அடுத்த பங்களாமேட்டில் எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஸ்ரீதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீசார் விசாரனை.
திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு புதிய வங்கி கணக்குகள் தொடக்கம் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். இதில், மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.