India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மெய்யப்பன் வீட்டில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த வீட்டில் பின்பக்க கதவை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தை சேர்ந்த கல்பனா, காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்களை நகை திருடிய வழக்கில் தெள்ளார் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காந்திநகர் கிராமத்தில் இருந்து சென்ற நகரப் பேருந்து நேற்று மாலை எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவா என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மலை மாவட்டம் போளூர் நகரத்தில் ஆரணி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் தரணிவேந்தன் திமுக மாநில மருத்துவரணி துணை தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மரு. எ.வ.வே.கம்பன், வணிகர் சங்கத்தினரை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆரணியில் பிரபல பேக்கரியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் குடை பிடித்துக் கொண்டும் ஹெல்மெட் அணிந்தும் செல்கின்றனர். இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட், 37.7 டிகிரி செல்சியஸ்யாக பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் – ஆரணி செல்லும் சாலையில் மங்களமேடு பகுதியில் 2024 மக்களவை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்டார். ஆவணங்கள் முறையாக கையாளப்படுகிறதா? என பார்வையிட்ட அவர் பறக்கும் படையினர் சோதனையிடும் முறையை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
2024 மக்களவை தேர்தலையொட்டி போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (29.03.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று முதல் மார்ச்.30 வரை மூடப்படுகிறது. எனவே திருவண்ணாமலையில் இருந்து
அரசு மருத்துவமனை, அவலூர்பேட்டை, சேத்பட், வந்தவாசி செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகவும் அல்லது திண்டிவனம் சாலை வழியாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யார் வெம்பாக்கம் அருகே உள்ள கரந்தை கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் கடந்த 26 ஆம் தேதி கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன், வல்லரசு, யுவராஜ் ஆகியோர் கல்குவாரியில் புகுந்து லாரியின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை சூறையாடினர்.
நேற்று(மார்ச்.28) அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தூசி போலீசார் வல்லரசு, யுவராஜ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து தலைமறைவான ஜெகதீசனை தேடி வருகின்றனர்.
சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.