India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (13.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் உள்ளதா என போலீசார் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிரிவலப் பாதையில் உள்ள பல்வேறு இடங்களிலும், நடைபாதைகளிலும் தீவிர சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மலையே மகேசன் எனப் போற்றி வணங்கப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர் அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி வரும் புதன்கிழமை (அக் 16) இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் வியாழக்கிழமை (அக்-17) மாலை 5.38 மணிக்கு நிறைவு பெறுகிறது மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அக்.14, 15 ஆகிய நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
திருச்சியில் 3 நாட்கள் நடைபெற்ற வரும் மாநில அளவிலான பள்ளி ஹேண்ட் பால் போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அணி கலந்துகொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட் பால் சங்க செயலாளர் சுரேஷ்குமார் வெற்றி பெற வாழ்த்தினார். சேலம் மாவட்டத்துடன் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
தி.மலையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாவட்டமாக திகழ்வதாக மாவட்ட ஊராட்சித் தலைவர் சீ.பார்வதி சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுவின் கூட்டத்தில், திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தெரிவித்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மகா தீப மலை மீதுள்ள ஆஸ்ரமத்துக்குச் செல்ல முயன்ற கேரள இளைஞா், மூச்சுத்திணறி உயிரிழந்தாா். எா்ணாகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணந்து என்பவர் அக்.5ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள கோவில்கள், ஆஸ்ரமங்களை தரிசிக்க வந்தாா். அக்.8-ஆம் தேதி மாலை கிரிவலப் பாதையில் ஒரு ஆஸ்ரமத்தில் தியானம் செய்துவிட்டு, மகா தீப மலையை ஒட்டியுள்ள கந்தாஸ்ரமத்துக்குச் சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
செங்கம் வட்டம், செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குப்பநத்தம் அணை இன்று பிற்பகல் 3 மணிக்கு திறக்க இருப்பதாக பொதுப்பணித்துறை (நீர் வளம்) அறிவித்துள்ளது. அணை திறக்கப்பட உள்ளதால் நீரின் வேகம் அதிகரிக்கும் என்பதால் செய்யாற்றின் கரையின் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கு இன்று செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி தலைமையில் திருவண்ணாமலை திமுக பாராளுமன்ற உறுப்பினர் சி. என்.அண்ணாதுரை அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.