Tiruvannamalai

News April 18, 2024

விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

image

தி.மலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வாக்காளர்கள் வாக்களித்த 7 வினாடிகளுக்குள் VVPAT ஸ்கிரீனில் வாக்களித்த சின்னமும் வேட்பாளர் பெயரும் தெரிந்துகொள்ளலாம் . எனவே, செங்கம் வட்டாட்சியர் முருகன் வாக்காளர்களை விழிப்புடன் இருக்க கேட்டுக்கொண்டார்.

News April 18, 2024

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

தி.மலை: காங்கிரசில் இணைந்த பாஜக நிர்வாகி

image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். செங்கம் G.குமார் முன்னிலையில் பாஜக தொழிலாளர் பிரிவு மாவட்டத் செயலாளர் ரமேஷ் இன்று காங்கிரசில் இணைந்தார். இதில், காங்., நகர தலைவர் காந்தி, வட்டாரத் தலைவர்கள், மற்றும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு CS ரமேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் பாஜக நிர்வாகியின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News April 18, 2024

கீழ்பென்னாத்தூர்: ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பணியாளர்களை அனுப்பும் பணியினை கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  அலுவலர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.

News April 18, 2024

தி.மலை: ஆட்சியர் நேரில் ஆய்வு

image

தி.மலை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட தி.மலை சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியினை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின், தேர்தலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

News April 18, 2024

வாக்களிக்க பெயரை உறுதி செய்ய வேண்டும்

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.

News April 18, 2024

சித்திரை வசந்த உற்சவம்

image

புகழ் பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்தின் நேற்று நான்காவது நாள் இரவு திருவிழாவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனைகள் நடைபெற்று. பின் சுவாமி மீது பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 18, 2024

102.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று(ஏப்.17) திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 102.2 டிகிரி பாரன்ஹீட்(39 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயினர்.

News April 17, 2024

தி.மலை: முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்களை இன்று(17.04.2024) நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், அரசு அலுவலர்கள் இருந்தனர்.

News April 17, 2024

தி.மலை: அமைச்சர் தீவிர வாக்குச் சேகரிப்பு

image

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இன்று(ஏப்.17), தி.மலை நகரின் முக்கிய வீதிகளில் வாகனம் மூலம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுகவினர் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை, மாலை மற்றும் வெற்றிவேல் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.