Tiruvannamalai

News February 21, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 20, 2026

தி.மலை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

தி.மலை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

தி.மலை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தி.மலை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. இப்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடத்தை சொன்னால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 20, 2026

தி.மலை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

தி.மலை: செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலையில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையதளத்தை கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம்.

News February 20, 2026

தி.மலை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி EASY!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுக.

News February 20, 2026

ஆரணி அருகே அதிரடி கைது!

image

தி.மலை: ஆரணி அருகே பையூர் ஆற்றுப்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், நடந்த சோதனையில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(35), ராகுல்(30) ஆகியோரிடம் கஞ்சா இருந்ததைக் கண்ட போலீசார், அவர்களௌ கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 20, 2026

தி.மலை: கோயில் எதிரே தூக்கில் தொங்கிய நபர்!

image

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நெல்லி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அதே பகுதியில் கோவில் எதிரில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

News February 20, 2026

CM-க்கு தபால் மூலம் கோரிக்கை வைத்த மாணவர்கள்

image

திருவண்ணாமலையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியின் மாணவர்கள் சார்பில், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கிட கோரி, நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, இன்று (பிப்.19) தங்கள் கோரிக்கையான இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு எழுதி மாணவர்கள், தமிழக முதலமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பினர்.

error: Content is protected !!