Tiruvannamalai

News February 22, 2026

தி.மலையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர்!

தி.மலை: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

தி.மலை மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 22, 2026

தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 22, 2026

தி.மலை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில்<> TamilNilam Geo-Info <<>>என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share பண்ணுங்க.

News February 22, 2026

தி.மலையில் பயனடைந்த 76,256 பேர்

image

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பல்நோக்கு உயர்தர சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 76,256 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தர்ப்பகராஜ் பேசினார்.

News February 22, 2026

தி.மலையில் துரத்தி துரத்தி கடித்த நாய்கள்

image

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் இருந்து நேற்று (பிப்.21) திருவண்ணாமலை பேகோபுர 11-வது தெரு பகுதியில் புள்ளிமான் ஒன்று உணவு தேடி வந்தது. அந்த மானை அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி துரத்தி கடித்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த மானை உயிருடன் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றனர்.

News February 22, 2026

ஆரணியில் அடித்தே கொடூர கொலை

image

ஆரணி அருகே பையூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் வினோத்குமார்(44) என்பவரின் 2வது மனைவி கவிதா(42). அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை சரமாரியாக தாக்கியதில் மனைவி கவிதா துடிதுடித்து உயிரிழந்தார். இந்த நிலையில் கணவன் விபத்து என நாடகமாடிய நிலையில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை செய்ததில் கணவன் அடித்து கொன்றது உறுதி ஆனது. ஆரணி போலீசார் கணவன் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 22, 2026

தமிழ் எழுத்து வடிவில் அமர்ந்த மாணவர்கள்

image

உலகத் தாய்மொழி தினத்தையையொட்டி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ் மொழியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ் எழுத்து வடிவில் அமர்ந்து தங்களது திறனை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!