India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) காலை தொடங்கி இரவு 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து, தி.மலை மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் திமுகவை சேர்ந்த அண்ணாதுரையை ஆதரித்து பல்வேறு கட்டங்களாக பிரச்சாரம் செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முதல்முறையாக வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆட்சியருடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். பின்னர், ஜனநாயக கடமை ஆற்றிய இளம் தலைமுறையினரை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
செங்கம், பொரசப்பட்டு கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் காலை வாக்குப்பதிவு தொடங்கியபோது வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதனால், மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று வாக்கு பதிவு தலைமை அலுவலர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாச்சியர் இருந்தார்.
சேத்துப்பட்டு அடுத்த மருத்துவாம்பாடி ஆதிதிராவிடர் பகுதியில் சாலை வசதி, சுடுகாட்டு பாதை என அடிப்படை வசதி செய்தி தராததை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க செல்லவில்லை.
திருவண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆரணி மக்களவைத் தொகுதியில் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் 12,855 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர்.
என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வந்தவாசி அருகே எரமலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். ஊர் பொதுமக்கள் பலர் வாக்களித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கடந்த மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்ற பின். பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க கட்டணமில்லா வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செல்போன் செயலி கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1950 மற்றும் 1800 4257047 ஆகியவற்றை பயன்படுத்தி வாகன வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூரில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரிசையில் நின்று வாக்களித்தார். உடன் அருணை பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் எ.வ.குமரன் இருந்தார். இந்தியா கூட்டணியின் வரவு கணக்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்குகிறது. தமிழ்நாடு புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்
Sorry, no posts matched your criteria.