Tiruvannamalai

News November 10, 2024

ஐப்பசி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

மலையே மகேசன் எனப் போற்றி வணங்கப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர் அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி வரும் 15-ந் தேதி காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் 15-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாண, மாணவிகள் பள்ளிக் கல்வி இடைநிற்றலை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 9, 2024

கலசப்பாக்கம் அருகே நாட்டு துப்பாக்கி தயார் செய்த நபர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கொண்டம் காரியந்தல் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் காலணியில் வசிக்கும் சங்கர் என்பவர் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகளை தயார் செய்து வருவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரை கைது செய்து அவர் தயாரித்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

News November 8, 2024

பொருள் இயல், புள்ளி இயல் கையேடு வெளியீடு 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் இன்று (08.11.2024) வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை மூலம் தயாரிக்கப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான திருவண்ணாமலை மாவட்ட புள்ளி இயல் கையேட்டினை வெளியிட்டார். மேலும், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News November 8, 2024

திருவண்ணாமலை நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

image

தமிழ் நாடு முழுவதும் தீபாவளியை முன்னிட்டு நவ.01 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை (09.11.2024) அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என திருவண்ணாமலை மாவட்ட சிஇஓ நேற்று உத்தரவிட்டுள்ளார். ஷேர் செய்யவும்

News November 7, 2024

மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நவம்பர் 11-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.முகாமில் பங்கேற்போர் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

News November 7, 2024

விபத்தில் தி.மலை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மரணம் 

image

வெளுக்கனந்தல் கிராமத்தில் வசிப்பவர் மோகன்குமார் (30). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, போளூர் நோக்கி வந்த புதுச்சேரியைச் சேர்ந்த சொகுசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மோகன்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2024

திருவண்ணாமலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை 5,156 மாணவர்,மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக கண்டறியப்பட்டு இதுவரை 1,001 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 4,155 மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி ஆசிரியர்கள்,ஆசிரியர் பயிற்றுநர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நவம்பர் மாத இறுதிக்குள் 4,155 மாணவர்,மாணவிகளையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியர் கூறினார்.

News November 7, 2024

தி.மலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

தி.மலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 06-ம் தேதி காலை 8.00 மணிமுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் 09.11.2024-ம் தேதி காலை 8.00 மணிமுதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என்பதை தெரிவித்தனர்.

News November 6, 2024

அரசு பேருந்து சக்கரம் ஏறியதில் பெண் பலி

image

சந்தவாசல், கொட்டா ரெட்டிப்பாளைரம் சேர்ந்த கௌதமி (25) கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இன்று டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்துவிட்டு வீடு செல்வதற்காக கண்ணமங்கலம்-போளூர் அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதற்காக முயற்சித்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!