India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்ரா பௌர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் பாதுகாப்புப் பணியில் 5000 போலீசார், 184 தீயணைப்பு வீரா்கள் மற்றும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனோடு, 15 தீயணைப்பு வாகனங்கள் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தி.மலை புலால் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது ஐந்து வயது மகன் கருப்பன் வீட்டின் அருகே உள்ள கிணற்றிற்கு தனது தாயாருடன் சென்றார். கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நகரின் எல்லைகளில் 11 தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை ரூ.10 என்ற கட்டணத்தில் 20 தனியார் பேருந்துகள், 81 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து அண்ணாமலையார் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதல் அதிக அளவில் கிரிவலம் செல்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
திருவண்ணாமலை நேற்று உலக பூமி தின கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நகரின் பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்கள் குப்பைகளை அகற்றியும் புனித தீர்த்த குளத்தை சுத்தம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் நகரின் பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு மக்களிடையே மண் வளத்தை காப்போம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்கான அனுமதியை திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று வழங்கினார். மொத்தம் 105 இடங்களில் நாளை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
கிரிவலப் பாதையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று ஆய்வு செய்தார். இதில், பாதையில் உள்ள கடைகளில் பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா இரவு நேரத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
தி.மலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.48 டிகிரி பாரன்ஹீட், 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை வடக்கு தெருவை சேர்ந்த விஜி என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென கடைக்குள் பீர் பாட்டில்களை ஒன்றன் பின் ஒன்றாக வீசிவிட்டு தப்பி ஓடினர். பீர் பாட்டில் வீசியதால் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் உடைந்து சிதறியது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் மாணவர்களுக்கு டெக்னாலஜி சார்பில் எளிய முறையில் கணித செயல்பாடுகள் விளக்கப்பட்டது. மேலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், உதவி ஆசிரியர் சாந்த குமார், எய்டு இந்தியா திட்ட மேலாளர் முருகன் ஆகியோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.