Tiruvannamalai

News April 25, 2024

திமலை: பணியாளர்களுடன் சாப்பிடும் கலெக்டர்

image

திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்த சித்ரா பௌர்ணமியையொட்டி கிரிவலப் பாதை திருநேர் அண்ணாமலை அருகே இன்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவினை பரிமாறி அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மதிய உணவு அருந்தினார். உடன் உதவி ஆட்சியர் இருந்தார்.

News April 25, 2024

தி.மலை: அதிமுக சார்பில் திறப்பு

image

தி.மலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆரணி, சேவூர்,கண்ணமங்கலம் எஸ்வி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் வெயிலின் தாக்கத்தை தணிக்க இலவச தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் மாஜி அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கர், அசோக் குமார் பாண்டியன் பாரி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

தி.மலை: தண்ணீர் பந்தல் திறப்பு

image

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில்   தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதில்
முன்னாள் அமைச்சர், ராமச்சந்திரன்  கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

News April 25, 2024

ரயில் சேவை நீடிப்பு

image

திருவண்ணாமலைக்கு 03-05-2024 முதல் தினசரி ரயில் சென்னை கடற்கரையில் மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு போளூர் வழியாக இரவு 12.05 மணிக்கு தி.மலை வந்தடையும். தி.மலையில் அதிகாலை 04.00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 09.50 மணிக்கு சென்றடையும். இவ்வாறு திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 25, 2024

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம். குறிப்பாக பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

News April 25, 2024

தூய்மை பணிகள் தீவிரம்

image

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கிரிவலம் சென்றனர். அதில் பக்தர்கள் பயன்படுத்திய குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை கிரிவல சாலையில் சிதறி கிடந்த நிலையில் அதனை இன்று நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

News April 25, 2024

வெள்ளி கருடசேவை உற்சவத்தில் பெருமாள்

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் கோயில் பிரகாரத்தை சுற்றி வீதி உலா நிகழ்வும், மகா தீபாராதனையும் நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்தம்,பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

News April 25, 2024

கல்வி மையத்தில் பாடல் போட்டிகள்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இன்று (24.04.2024) மாணவர்களுக்கு பாடல் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பாடல்களை பாடினர்.

News April 25, 2024

எச்சரித்த மாவட்ட ஆட்சியர்

image

திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கடுமையான கூட்ட நெரிசலுக்கு இடையே, நோயாளி இல்லாமல் சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸை அட்சியர் பாஸ்கர பாண்டியன் நிறுத்தி கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.