India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், வாகனங்களை சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட்டனா். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் குறைந்து காணப்பட்டது.
தி.மலை மாவட்டத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 35 பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கரைசலை பொதுமக்கள் பருகி வெப்பம் தொடா்பான நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று தெரிவித்துள்ளாா். அதன்படி,தி.மலை, செங்கம், செய்யார், வந்தவாசி, ஆரணி, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் அமைக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம், செங்கம் இன்று அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி (105. 8 டிகிரி ஃபாரன்ஹீட்) செல்சியஸ் பதிவானது. நேற்றைய தினத்தைவிட ஒரு டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருப்பினும் வெப்பம் கடுமையாகவே இருந்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வாகனங்களின் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் 2-4 டிகிரி உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தி.மலை நகர பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாமலையார் கோயில் செல்லும் கிரிவலப் பாதை சின்ன கடை தெருவில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று வெள்ளி கிழமையையொட்டி 10.30. மணிக்கு மேல் ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.
திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு என்ற ஊரில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில். 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய, தேவராப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். புராணக் கதைகளைக் கொண்ட இத்தலத்தில் திருஞானசம்பந்தர் பாடல்பாடி வழிபட்டுள்ளார். இத்தலத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார். 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். 9 வாயில்களைக் கடந்து மூலவரைத் தரிசிப்பது சிறப்பாகும்.
செய்யார் அருகே செய்யாமூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு மற்றும் அனக்காவூர் பகுதியைச் சேர்ந்த லோகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செய்யாறு பாராசூர் பகுதியில் சென்ற போது கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து செய்யார் அரசு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அபினேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவ்விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ. 50 கட்டணத்தில் சிறப்பு பாசஞ்சர் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து ரயில் புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மீண்டும் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 சென்னை கடற்கரை வந்தடையும்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரின் மையத்தில் அமைந்துள்ள சுபம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாகணபதி ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முகூர்த்த நேரத்தில் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்திற்கு வாசக்கால் வைக்கும் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களும் கீழ்க்காணும் ஆவணங்களை அளித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருவண்ணாமலை – சென்னை கடற்கரையில் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வழியாக திருவண்ணாமலை வரை இன்று தொடங்க இருந்த ரயில் போக்குவரத்து ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று திருவண்ணாமலைக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.