India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை சட்டமன்ற தொகுதியில், இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் 9 முறை தி.மு.க-வும், 6 முறை காங்கிரசும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதிமுக ஒருமுறை கூட இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. திமுக கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ். தணிகைவேலை விட 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

போளூர் தாலுகா அலுவலகத்தில் டவுன் நில அளவையராக பணியாற்றி வரும் சக்திவேல் நேற்று (பிப். 27) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் பகுதியை சேந்த சின்னராசு என்பவர், தனது பாகப்பிரிவினை செய்யப்பட்ட வீட்டை அளக்க அணுகியபோது சக்திவேல் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அவரை கைது செய்தனர்.

செய்யாறு; பில்லாந்தி ஊராட்சி தேவானத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சட்ட வழியில் போராடி வருபவர் கல்பனா. இவரை, ஆக்கிரமிப்பாளர்களான குமாரி, கீதா, ஏழுமலை, முருகன் ஆகியோர் கட்டை மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த கல்பனா மீட்கப்பட்டு, தற்போது ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், தங்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டளோ, அவசர காலத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

தி.மலை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
▶️விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் ▶️அல்லது<

தி.மலை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்

தி.மலை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

தி.மலை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

திருவண்ணாமலை, போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேருராட்சி ஒன்பதாவது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்லின் மோசஸ் நேற்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். உடன் நகர திமுக செயலாளர் இரா.முருகன், பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் அவர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தி.மலை மாவட்டத் தில் இந்த திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 4-ந் தேதி வரை வினியோகம் செய்யப்படும் என தி.மலை ஆட்சியர் அறிவித்துளார்.
Sorry, no posts matched your criteria.