India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கம் வட்டம் அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இன்று விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். அவரது குடும்பத்தார் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து அவரது உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கம் மேல் வணக்கம்பாடி பகுதியில் உள்ள சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மின்விளக்குகள் மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் (21) மற்றும் மற்றொரு ஐயப்பன் (18) ஆகிய இருவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பலத்த சூறாவளிக் காற்றோடு மழை பெய்தது. சூறாவளிக் காற்றில் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து முற்றிலும் சேதமானது. 1000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவவை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோயிலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
செங்கம், மேல்வணக்கம்பாடி கிராமத்தில் நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அலங்கார விளக்குகள், பந்தல் போடப்பட்டிருந்தது. விழா முடிந்த நிலையில் இன்று பிற்பகல் மின்விளக்குகள், சீரியல் செட்டுகள் மற்றும் பந்தலை பிரித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்களை மின்சாரம் தாக்கியது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நாளை வணிகர்கள் தினத்தை வியாபாரிகள் கொண்டாடும் பொருட்டு ஆண்டு தோறும் விடுமுறை அளித்து வருகின்றனர். சிறு வியாபாரிகள், பெரிய வியாபாரிகள் அனைவரும் நாளை விடுமுறை அளித்து வணிகர் தினத்தை கொண்டாட வேண்டுமாறு வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் சத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கடலைக்கடை மூலை சந்திப்பு மற்றும் திருவூடல் தெருவில் பல்வேறு கடைகள் மற்றும் மார்க்கெட் உள்ளது. இதனால் அப்பகுதியில் தினமும் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே இப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. எனவே, அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேருராட்சியில் அமைந்துள்ள ராணி மஹாலில் ஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பில் மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் பல்வேறு போட்டிகள் இன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பரமன் பச்சைமுத்து கலந்து கொண்டு “பிள்ளை வளர்ப்பு” குறித்து உரையாடினார்.இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த நாட்டேரி கிராமத்தில் கோடைகால விழிப்புணா்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது, வெப்ப அலையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக உடலில் நீர்ச் சத்து குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும் பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
Sorry, no posts matched your criteria.