Tiruvannamalai

News November 30, 2024

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு அவசரகால உதவி எண்

image

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. மழை தொடர்பான தகவல்களை கட்டுப்பாட்டு அறை எண்:1077 மற்றும் தொலைபேசி எண் 04175-232377 தொடர்பு கொண்டு உதவி தேவைப்படுவோர் மற்றும் தகவல் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில் நவகோபுரங்கள்

image

அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நவகோபுரங்களுக்கும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நவகோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. கோயில் கோபுரங்கள் மின் ஒளியால் மின்னப்படுவதை பக்தர்கள் கண்டு பக்தி பரவசத்தில் மகிழ்ச்சி அடைந்து வணங்கி செல்கின்றனர்.

News November 30, 2024

திருவண்ணாமலையில் அதி கனமழைக்கான எச்சரிக்கை

image

புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் விடியவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

News November 30, 2024

திருவண்ணாமலை கூட்டுறவு துறை அறிவிப்பு 

image

தமிழகத்தில் பொதுப்பெயா் (ஜெனரிக்)மருந்துகள் பிற மருந்துகளை விட  குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று கடந்த ஆக.15-ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வா் அறிவித்தார்.தி.மலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்புவோா் டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது

News November 30, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

தி.மலை: ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை ரூ.3.70 கோடி

image

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக, ரூபாய் 3.70,99,526/- ம், 230 கிராம் தங்கம், 1,140 கிலோ வெள்ளியை செலுத்தியுள்ளனர்.

News November 29, 2024

தி.மலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலையில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

தி.மலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

image

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.  இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஆலய பணியாளர்கள் ஒன்றிணைந்து உண்டியல்களை உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

News November 28, 2024

தி.மலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

தி.மலை  விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிா்க் காப்பீடு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.517.50 பிரீமியம் தொகையும், ராபி உளுந்து பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.297.7 பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அருகேயுள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வரும் 30-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும்.

error: Content is protected !!