Tiruvannamalai

News March 4, 2026

தி.மலை: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

தி.மலை மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 4, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களாகவும், 18 முதல் 32 வயது வரை நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

ஆரணியில் மும்முனை போட்டி

image

ஆரணி தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. 2021-ல் வெறும் 3,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக இங்கு தோல்வியடைந்தது. இந்நிலையில், புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆரணியில் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புக்கும் சவாலாக அமையலாம். ஆரணி தொகுதி இந்தமுறை யாருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

News March 4, 2026

தி.மலை: தூக்கில் தொங்கிய ஆண் சடலம்

image

ஆரணி அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியின் மகன் புஷ்பநாதன் (49). இவர் மது குடிப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் தனி வீட்டில் தங்கி வந்துள்ளனர். இலையில், புஷ்பநாதன் தன் தனத்தையிடம் உங்களிடம் இருக்கும் 3 வீட்டில் ஒரு வீடை தனக்கு தருமாறு கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News March 4, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மார்ச் 3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

தி.மலை: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 3, 2026

தி.மலை: மெடிக்கலில் மாத்திரை வாங்குறீங்களா?

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகளால் உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகார் மூலம், மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 3, 2026

தி.மலையில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

தி.மலை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

News March 3, 2026

தி.மலை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில்<> mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 3, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 2) இரவு 10 முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!