India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, இளைஞர் திறன் திருவிழா வருகிற 26-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த 16 மற்றும் 17ஆம் சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) (ம) நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகரில் இன்று (22.11.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பகிரவும்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2, 3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்திலிருந்து விநியோகம் செய்யும் நீரேற்று பகுதிகள் என மேட்டுப்பாளையம் பவானி ஆற்று படுகை மற்றும் பவானி காவேரி ஆற்றுப்படுகையில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்படக்கூடிய நீரை காய்ச்சி பருக ஆணையாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (21.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மூலனூர், குண்டட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, தெரு நாய்கள் கடித்து, ஆடுகள் உயிரிழப்பது நடந்து வருகிறது. இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்தவும், இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், வரும் 23ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது அதிகரித்துள்ளது. மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினாலும் ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்றாலும் விவசாயிகளுக்கு எந்த ஒரு நஷ்ட ஈடும் வழங்குவதில்லை. இந்நிலையில் ஆறு மாதத்தில் மட்டும் 195 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறியது குறிப்பிடத்தக்கது.
1.உடுமலை மலை கிராமத்தில் தொடரும் சோகம்
2.திருப்பூரில் 3நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்
3.போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!
4.உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
5.மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு
6.திருப்பூர்: 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
7.ஊத்துக்குளி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் பலி – விவசாயிகள் போராட்டம்
திருப்பூர் அஞ்சல் தெற்கு உட்கோட்டம் மற்றும் திருப்பூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நாளை நவ 21ஆம் தேதி தொடங்கி 23 தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது, குமரன் சாலையில் உள்ள லயன்ஸ் சங்க கட்டிடத்தில் நடக்கும் முகாமில் முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் கார்டு எடுப்பது போன்றவற்றை தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு நடந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.