India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனைத்து விதமான வரி உயர்வு பிரச்சினை, சட்டம் ஒழுங்கு என தமிழக மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தி.மு.க., அரசைக் கண்டித்து வரும் டிச.,3ம் தேதி அதிமுக, சார்பில் திருப்பூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் திருப்பூர் மாமன்ற உறுப்பினர்கள், உண்ணாவிர போராட்டம் மேற்கொள்வார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியில் 2024-25ஆம் ஆண்டு இரண்டாவது அரையாண்டு வரையிலான வரி நிலுவைகளை செலுத்தலாம் எனவும், இந்த வரிகளை இணையதளம் வழியாகவும் செலுத்தலாம் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
பல்லடம் 3 பேர் கொலை வழக்கில், தெய்வசிகாமணி தோட்டத்தில் 3 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த தம்பதியர் தங்கி வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர்களை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக அந்த நபர் தோட்டத்தை நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்லடம் போலீசார் தகவலின்படி சாயல்குடி போலிசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரில் இன்று (29.11.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 43வது இந்திய பன்னாட்டு வர்த்தக கண்காட்சியின், 2047-ல் இந்தியா என்ற கருப்பொருள் விளக்கக் காட்சிப்படுத்தலை சிறப்பாக அமைத்ததற்காக, தமிழ்நாடு மாநில அரங்கிற்கு வழங்கப்பட்ட விருதினை இன்று காங்கேயம் எம்எல்ஏவும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
திருப்பூர் பல்லடம் அருகே வலுப்பூர் அம்மன் கோவில் பகுதியில் இன்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 3 பேரை, கொலை செய்துவிட்டு, நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்நிலையில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளை தேடும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் பல்லடம் அருகே வலுப்பூர் அம்மன் கோவில் பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை, கொலை செய்துவிட்டு, நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரனை நடைபெற்று வருவதாக காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என குறிப்பிட்டுள்ளார்.
பல்லடம் அருகே வலுப்பூர் அம்மன் கோவில் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வசிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேர் கொலை செய்துவிட்டு நகை பணம் திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட மூவர் தந்தை, தாய், மகன் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.