Tiruppur

News May 26, 2024

தொடர் மழை காரணமாக பீன்ஸ் 200 ரூபாய்க்கு விற்பனை

image

திருப்பூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு அவிநாசி காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் விளைவித்த பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நிலையில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து பீன்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

News May 26, 2024

திருப்பூர்:பரவலாக லேசான மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதிய வேளையில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு பின்வருமாறு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் உலகத்தில் ஐந்து புள்ளி என்பது மில்லி மீட்டர் மழையும், தெற்குப் பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், பல்லடத்தில் 3.20 மில்லி மீட்டர் மழையும், மூலனூரில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News May 25, 2024

சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5  ஊக்கத்தொகை

image

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வைத்திருப்பவர்கள் மற்றும் சொத்தின் உரிமையாளர்கள் 2024 -2025ம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தினால், சொத்து வரியில் உடனடியாக 5 சதவீதம் தள்ளுபடியை ஊக்கத்தொகையாக பெற்றுக்கொள்ளலாம் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

திருப்பூர் திருமூர்த்தி அணை பற்றிய குறிப்பு!

image

திருப்பூரிலுள்ள திருமூர்த்தி அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் 1967ஆம் ஆண்டு பாலாறின் குறுக்கே கட்டப்பட்டது. பி.ஏ.பி., திட்டத்தில் பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைதொடர்களில் உள்ள அருவி, ஆறுகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது.

News May 25, 2024

அறங்காவலர் குழுவுடன் எம்எல்ஏ ஆலோசனை

image

திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று கோவிலில் அறங்காவலர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். நடந்து முடிந்த விழா பற்றியும், கோவிலில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் பணியாளர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News May 25, 2024

திருப்பூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருப்பூரில் வார விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வஸ்துக்காக 40 சிறப்பு பேருந்துகள் திருப்பூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்தும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் என 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.

News May 25, 2024

உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு டீன் அஞ்சலி

image

திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்த சுடர்க்கொடி (36) என்ற பெண் விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சுடர்க்கொடியின் சடலத்துக்கு, மருத்துவமனை டீன் முருகேசன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஒட்டுமொத்த மருத்துவ அதிகாரிகளும், ஊழியர்களும் அணிவகுத்து நின்று, நேற்று அஞ்சலி செலுத்தினர்.

News May 24, 2024

திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

திருப்பூர்: கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 4120 விண்ணப்பம்

image

திருப்பூர் மாவட்டத்தில் 281 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இப்பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்தின் 8 தாலுகாவில் மொத்தம் 4120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி தெரிவித்தார்.

News May 24, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி: மாவட்ட நிர்வாகம் தகவல்

image

அரசு கலை கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள, 164 அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே, 5ம் தேதி துவங்கியது. 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், காலக்கெடு இன்று (மே 24) வரை நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.