Tiruppur

News May 28, 2024

மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் இந்த ஆண்டுக்கான முதுநிலை பிஎச்டி படிப்பினை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

திருப்பூர்: லாரி மோதி 7 வயது சிறுமி பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெஸ்ட் நகர் பகுதியில் உள்ள அம்மன் நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரது ஏழு வயது சிறுமி தர்ஷிகா சாலையை கடந்து உணவு தின்பண்டங்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீடு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது மேற்கு நோக்கி வந்த லாரி எதிர்பாராதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 27, 2024

திருப்பூர்: காட்டிற்குள் சடலம்… கொலையா?

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காட்டிற்குள் கிடந்த ஆண் சடலத்தை இன்று மீட்டு காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காங்கேயம் அருகே சிவன்மலையில் இருந்து ஆலம்பாடி செல்லும் சாலையில் டாஸ்மார்க் கடை உள்ளது. கடைக்கு சிறிது தூரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் இன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து கொலையா என்ற கோணத்தில் காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 27, 2024

திருப்பூர் அவிநாசி கோயில் சிறப்பு!

image

திருப்பூர் அவிநாசியப்பர் கோயில் கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் பல புராணக் கதைகளைத் தாங்கி நிற்கிறது. அவினாசியப்பருக்கு வலது புறம் அம்பாளின் கோயில் உள்ளது இது பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இங்கு 63 நாயன்மார்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடராசர் மண்டபத்தில் ஐம்பொன்னால் ஆன நடராசர் சிலையும் இருப்பது சிறப்பானதாக உள்ளது.

News May 27, 2024

திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் சாமிநாதன் ஆலோசனை

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வள்ளியரச்சல் கிராம பகுதிகளில் திமுக கட்சி நிர்வாகிகளிடம், பொதுமக்களின் கோரிக்கை மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News May 27, 2024

திருப்பூர் மாவட்ட அளவிலான கபடி போட்டி

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடந்து வந்தன. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நத்தக்காடையூர் கேஜிஐ கல்லூரி அணி முதலிடமும், அணைப்பதி ஐகே அணி 2ம் இடமும், அங்கேரிபாளையம் 7 பிரதர்ஸ் அணி 3ம் இடமும் பிடித்தன.

News May 27, 2024

திருப்பூரில் விபத்து: நண்பர்கள் பலி!

image

பொங்கலூர் அருகே தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (23). தொங்குட்டிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்துரு (22). இவர்கள் இருவரும் நேற்று கொடுவாயிலிருந்து அவினாசிபாளையத்திற்கு கியாஸ் சிலிண்டர் எடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பைக் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவரும் நேற்று உயிரிழந்தனர்.

News May 27, 2024

திருப்பூர்: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி

image

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் 2024-25ம் கல்வி ஆண்டில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கல்லூரியில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெற்று பயனடையலாம். விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அறை எண்.523, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர், திருப்பூர் 641604 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என நேற்று கலெக்டர் தெரிவித்தார்.

News May 26, 2024

மாவட்ட ஆட்சியரை சந்தித்த நகர மன்ற தலைவர்

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நகர மன்ற தலைவராக பாப்பு கண்ணன் உள்ளார். இவர் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை நேற்று மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜிடம் வழங்கினர்.

News May 26, 2024

திருப்பூரில் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது பிளஸ் டூ தேர்ச்சி பெறாத 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு செல்ல வேண்டும். மேலும் பிளஸ் டூ முடித்த அனைவரையும் உயர்கல்வியில் சேர உயர்கல்வி வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.