India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உள்ளூர் வங்கி அதிகாரியாக பணியில் சேர டிகிரி, சிஏ முடித்தவர்கள் தகுதியுள்ளவர்கள். விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாநில மொழியை பேச, எழுத கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (ம) முன்னாள் ராணுவத்தினர் ரூ.175 கட்டணம் ஆகும்.

திருப்பூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீர ராகவரை வணங்கினால் சகல பிரச்சனைகளும் நீங்குமாம். ஏனுங்க, உங்களுக்கு கடன் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் இந்த சனிக்கிழமை வீரராகவரை வணங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குங்கள். அப்படி செய்தால் பிரச்சனை நீங்குமாம். ஏனுங்க உடனே கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, விரைவில், Hair cut, Facial, Skin care, உள்ளிட்ட, ஆண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி தொடங்குகிறது. மேலும் பயிற்சி, சீருடை, உணவு, விடுதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

அவிநாசி பகுதியில் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்க்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக இடையீட்டு மனு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாநில அளவிலான காவல்துறையினருக்கான பணி திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் நடைபெற்றுள்ளது. இதில் திருப்பூர் மாநகர காவல் துறை ஒட்டுமொத்த அளவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சுழற்கோப்பை வென்றுள்ளது. கணினி வழி குற்ற ஆய்வகப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கனகவல்லி கைரேகை மேம்பாடு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டி பரிசு வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.05.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், உடுமலை,பல்லடம், தாராபுரம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

▶️திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) -9498101320. ▶️திருப்பூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் – 9498104755, 0421-2970013. ▶️அவிநாசி DSP – 8300037777. ▶️பல்லடம் DSP – 8300043050. ▶️உடுமலைப்பேட்டை DSP – 8072519474. ▶️தாராபுரம் DSP – 9443808277, 04258-220325. ▶️காங்கேயம் DSP -7397027979, 04257-230883. இதை Share பண்ணுங்க.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள TGT, PGT, Clerk, Ward Boy பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 10th, 12th, B.Ed, B.P.Ed, B.Sc, BA, Diploma, M.Sc, MA, MBBS, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பவளம் ரூ.22,000 முதல் ரூ.47,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.