India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே..,ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு செப்.15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. கணினி அடிப்படையான தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.<

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் கவியரசன். இவரை கடந்த ஜூலை 24ஆம் தேதி ஓர் கும்பல் அரிவாளால் கொலை வெறித் தனமாக தாக்கினர். இதுகுறித்த புகாரில் பார்த்திபன்(27), கோபாலகிருஷ்ணன்(23), பிரித்திவிராஜ்(23), தாமரை சந்திரன்(23) ஆகியோரை சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின் கீழ் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார்.

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

▶️முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE) <<17511404>>தொடர்ச்சி<<>>

திருப்பூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே கிளிக் செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.(SHARE)

திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் அன்னபூரணி என்ற மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா குடும்ப சங்கமமாக நடைபெற்றது. 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, ஒரே மாதிரி உடை அணிந்து, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’மருத்துவ நிர்வாக அதிகாரி’ பணிக்கான பயிற்சி திருப்பூரிலேயே வழங்கப்படுகிறது. கடந்த ஆக.1 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் உள்ளன. பயிற்சி பெற்றால் உங்களுக்கு வேலை நிச்சயம். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<

திருப்பூர்: தாராபுரத்தில் காதணி விழாவிற்கு சென்ற காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த்(19) நேற்று(ஆக.24) அமராவதி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அஸ்வந்த், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் யாரும் குளிக்க கூடாது, என போடப்பட்ட எச்சரிக்கையை மீறி விளையாட்டாக குளித்ததால் இந்த விபரீதம் நடந்தேறியுள்ளது எனத் தெரிவித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு கொச்சியில் இருந்து பெங்களூருக்கு விளைநிலங்கள் வழியாக ஐடிபிஎல் நிறுவனம் விவசாயிகளின் போராட்டங்களை மீறி எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இங்கு எரி காற்று குழாய்களை அமைக்க அளவீடு செய்ய இன்று இந்த நிறுவன அதிகாரிகள் இங்கு வந்தனர். இங்குள்ள விவசாயிகள் இவர்களை சிறைப்பிடித்து வைத்ததால் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி பகுதிகளில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 இலக்கை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.