India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் நல்லுர் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் மௌனிமுல் இஸ்லாம், ரஜனா பேகம் உள்ளிட்ட 8 பேர் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பது தெரியவந்தது. 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில், 21வது திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் நிகழ்வாக இன்று நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் கலந்துகொண்டு, நயம்பட உரை என்னும் தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வில் திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் குப்பை கொட்டுவது வழக்கமாகி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ‘குப்பை கொட்ட கூடாது மீறினால் புகைப்படம் எடுத்து மீடியாவில் வெளியிடப்படும்’ என பேனர் வைக்கப்பட்டுள்ளது
பல்லடம் மங்கலம் சாலை தண்டாயுதபாணி கோவில் முன்பாக, சாலையில் உள்ள இரும்பு தடுப்பு உடைந்த நிலையில் காணப்படுவதால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என பல்லடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணாதுரை, கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மூன்று ஆண்டுகளாக மூச்சு திணறல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனமுடைந்த சண்முகப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள், ரேஷன் அட்டை புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான மனு அளிக்கலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் முதலீடு செய்து, செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான 8 % வட்டியுடன் 21 ஆண்டுகள் கழித்து ரூ.11 லட்சத்து 16 ஆயிரத்து 815 கிடைக்கும். இதைதொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் தற்போது இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 200 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் மற்றும் ராணி குமாரி தேவி தம்பதியினர், திருப்பூர் ராயபுரம் அருகே குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகறாரில், தனது மனைவியான ராணி குமாரி தேவியை, கழுத்தை நெருக்கி கொலை செய்துவிட்டு, தலைமறைவானார். இந்த கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பீகார் மாநிலத்திற்கு தனிப்படை செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பொங்கலூர் சோழியப்பகவுன்புதூரில் வசிப்பவர் முத்துலட்சுமி. இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவருக்கும், அஜித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். கணவனை பிரிந்து தன்னுடன் வாழுமாறு, முத்துலட்சுமியை, அஜித் வற்புறுத்தியுள்ளார். மேலும் புகைப்படத்தை, கணவனிடம் காட்டிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூரில் 21வது புத்தக கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 140 ஸ்டால்களில் 75க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. இந்த கண்காட்சி இன்று தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ள, உங்கள் பிள்ளைகள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள செய்தியை share செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.