India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதில், முதல் இடத்தினை மதுரை மாநகர காவல் பெற்றது. இரண்டாவது இடத்தினை திருப்பூர் மாநகரக் காவல் பெற்றது. மூன்றாவது பரிசு திருவள்ளூர் மாவட்டக் காவலுக்கு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்னலையில் திருப்பூரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான ஜூனியர் வாள் வீச்சுப் போட்டி உத்தரகாண்ட் பாட்னாவில் நடைபெற்றது. இதில் கேடட் வாள் வீச்சுப் போட்டியில் 2 வெண்கல பதக்கம் வென்று திருப்பூர் மாணவன் மவுரிஸ் சாதனை படைத்துள்ளான். அவருக்கு வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த <
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுடோ போட்டியில், திருப்பூர் கே எஸ் சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, 1 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 1 வெண்கல பதக்கம் வென்று பள்ளிக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 31ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, கலெக்டா் அலுவலக வளாக அறை எண் 240ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த குறை தீர்க்ககும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் கோவில் வழி பேருந்து நிலையத்தில் மகாராஜா பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். முத்தனம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கொடுத்த பணத்திற்கு அதிகமாக பேக்கரியில் பானிபூரி எடுத்து சாப்பிட்டுள்ளார். இதை தட்டி கேட்ட மகாராஜாவை மணிகண்டன் கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் மணிகண்டனை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த 28 வங்கதேசத்தை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வங்கதேசத்தினரும், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு வங்கதேச நபர்களும், நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு வங்கதேச நபர்கள் என 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதும் 129 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெற்கு தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூர் மாநகரில் வாகன விபத்து, கிணற்றில் தவறி விழுதல் உள்ளிட்ட உயிர் மீட்பு பணிகள் 671 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து போலீசாரும் இரவு பகல் பாராமல் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.