Tiruppur

News January 29, 2025

திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

image

திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் 31-ம் தேதி காலை 10.20 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்குகிறார். கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்தத் தகவலை மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News January 29, 2025

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை 

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ் அகமது பாஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வட்டார மட்டும் தாலுகா அளவில் குழந்தை பாதுகாப்பு குழு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

News January 29, 2025

திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன் நகர் 3வது வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகன் ஸ்டீபன் வீட்டில் அருகே உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ஸ்டீபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 29, 2025

திருப்பூரில் வங்கதேசத்தினர் 17 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் என்ற போர்வையில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தினர் கைதாகி இதுவரை என்பதற்கும் மேற்பட்டோர் கைதான நிலையில், நேற்று வாவிபாளையம் பகுதியில் தங்கியிருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். நல்லூர் பகுதியில் தங்கியிருந்த 11 பேர் கைது என குறிப்பிடதக்கது.

News January 28, 2025

காங்கேயத்தின் மற்றொரு சிறப்பு!

image

காங்கேயம் என்றால் நம் எல்லோருக்கும் காளைகள் தான் நியாபகம் வரும். ஆனால் காங்கேயத்தின் இன்னொரு சிறப்பு, சுத்தமான பசு நெய் தான். நீங்கள் காங்கேயம் சென்றால் அந்த காற்றில் நெய் மனத்தை உணரலாம். இது காங்கேயம் மாட்டுப்பாலில் இருந்து தயாரிக்கப்படும், உயர் தூய்மை கொண்ட நெய். பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த நெய், ஒரு தனித்துவமான நறுமணம், சுவை கொண்டது. இது பல்வேறு ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

News January 28, 2025

திருப்பூரில் மேலும் 15 வங்கதேச வாலிபர்களிடம் விசாரணை

image

திருப்பூர் மாநகரில் வங்கதேச வாலிபர்கள் ஏராளமானோர் ஊடுருவி இருப்பதாக தீவிரவாத தடுப்பு குழுவினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், தொடர்ச்சியாக திருப்பூரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வங்கதேச வாலிபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11, திருமுருகன்பூண்டியில் 4 என 15 பேரிடம் ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2025

பாறைக்குழியில் 3 பேர் பலி: இழப்பீடு வழங்க பாஜக அறிக்கை

image

திருப்பூர், வேலம்பாளையம், இடுவாயைச் சேர்ந்த ரேவதி, அவரின் இரு மகள்கள் ஆகிய மூன்று பேர் பாறைக்குழியில் துணி துவைக்க சென்றபோது, நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு பா.ஜ., ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இந்த இழப்புக்கு, தமிழக அரசு உடனடியாக அந்த குடும்பத்துக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன்‌ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News January 28, 2025

கல்குவாரி விபத்து எதிரொலி: கலெக்டர் அறிவுறுத்தல்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய நீரில் குளிக்க, துணி துவைக்க சிறுவர்கள், பொதுமக்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. கல்குவாரிகளில் நீராடுதல், விளையாடுதல், துணி துவைத்தல், கால்நடைகளை மேய்த்தல் என பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். கல்குவாரிகளுக்குள் சென்று விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

News January 28, 2025

திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய நீரில் குளிக்கவோ துணி துவைக்க சிறுவர்கள் பொதுமக்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே கல்குவாரிகளில் நீராடுவதற்கோ விளையாடுவதற்கோ துணி துவைப்பதற்கோ கால்நடை மேய்ப்பதற்கோ பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 31 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அறை எண் 20-இல், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 200க்கும் மேற்பட்டவா்களை தோ்வு செய்ய இருக்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள www. tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94990 55944 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!