India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் லோக் அதாலத்திற்கு இரண்டு நிரந்தர உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தகுதியான நபர்கள் திருப்பூர் மாவட்டம் சட்டப் பணிகள் ஆணை குழு தலைவரிடம் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்விக் கூட்டமைப்பு சார்பில் கோவாவில் சர்வதேச அளவிலான சிலம்பம் கலந்து கொண்டார். போட்டியில் தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பிரிவுகள் இருந்து குண்டடம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் மோதி விபத்தில் உள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள், மேல் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என டி.ஆர்.ஓ. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
திருப்பூர் மாவட்டத்தில், டிரோன் மகளிர் திட்டத்தில், கேத்தனூர் கிராமப் பஞ்சாயத்தில் மனோரஞ்சிதம் அவரது செல்போன் எண் 9566615556 மற்றும் குண்டடம் வட்டாரம் சங்கரண்டாம்பாளையம் சரண்யா அவரது செல்போன் எண் 6369124725 என்பவருக்கு டிரோன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவர் கைபேசி செயலி மூலமாக டிரோன் மகளிரை நேரடியாகத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மூனாரை சேர்ந்த மாணவி ஒருவர் உடுமலையில் உள்ள அரசு விடுதியில் தங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை ஆசிரியை அடித்ததாக உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடா முயற்சி திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவரது படத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில், திரையரங்குகள் முன்பாக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகில் போட்டியாக கருதப்பட்ட நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது நட்பு பாராட்டி வருகின்றனர்.
▶ ஸ்ரீ சத்தி சினிமாஸ். ▶ தமிழ்நாடு தியேட்டர். ▶ டைமன்ட் தியேட்டர். ▶ எம்.பி.எஸ் தியேட்டர். ▶ சினிபேர்க் தியேட்டர். ▶ ஸ்ரீனிவாசா தியேட்டர். ▶சிவன் தியேட்டர். ▶ சக்தி தியேட்டர். ▶ கேஎஸ்பி தியேட்டர். ▶ வாரணாசி தியேட்டர் என ஆகிய தியேட்டர்களில் வெளியாகிறது.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் உடுமலையில் பணியாற்றும் காவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடுமலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ஜெய் கணேஷ் தளி காவல் நிலையத்துக்கும், அமராவதி நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் நாகராஜன் உடுமலைக்கும், குமரலிங்கம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில் மடத்துக்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.