Tiruppur

News February 9, 2025

பல்லடம் விடுதியில் தொழிலதிபர் மர்மச்சாவு

image

பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் நடத்தி வந்தார். வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக அருகில் உள்ள விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பல்லடம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News February 9, 2025

இளம் பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

image

வெள்ளகோவில் முத்தூர் சாலை கொங்கு நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மூத்த மகள் வளர்மதி. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரை அக்கம் பக்கம் தேடி பார்த்து கிடைக்காததால், கிணற்றில் பார்த்தபோது பிணமாக கிடந்துள்ளார். தொடர்ந்து வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, வளர்மதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 9, 2025

காதலை கண்டித்து பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

image

கடலூரைச் சேர்ந்த பாட்ஷா என்பவரின் மகன் இம்தியாஸ் (வயது 25). இவர் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலை கண்டித்த சிறுமியின் பெற்றோருக்கு, இம்தியாஸ் கொலை மிரட்டல் விடுத்ததாக பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் இம்தியாசை கைது செய்தனர்.

News February 8, 2025

தாராபுரம் இரவு நேர ரோந்து பணி போலீசாரின் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

News February 8, 2025

நிரந்தர உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மக்கள் நீதிமன்றத்திற்கு, இரண்டு நிரந்தர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் இந்தியர் இளநிலை பட்டதாரி படிப்பு முடித்திருக்க வேண்டும். 21 வயது முதல் 62 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் நீதி சேவை துறையில் 10 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

திருப்பூர் மாநகராட்சிக்கு 2.8 கோடி அபராதம்

image

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரியாக கையாளாத திருப்பூர் மாநகராட்சிக்கு 2.8 கோடி ரூபாய் இடைக்கால அபராதம் விதிக்க கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் குப்பை கொட்டுவதற்கான பிரத்தியேக இடமில்லாததால் கொங்கு பாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழுவில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வந்தது.

News February 8, 2025

தனியார் பேருந்து விபத்து: ஓட்டுநர் உரிமம் ரத்து 

image

திருப்பூர், செங்கப்பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், லாரியை வலது புறம் முந்த முயன்ற போது இந்த விபத்து நடந்ததாகவும், மேலும் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

கொலை வழக்கில் ஆஜராகச் சென்றவரை கொல்ல முயற்சி

image

கொலை வழக்கில் விசாரணையில் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்களை காரில் வந்த மர்ம கும்மல் தாக்கியது. இதில் குட்டப்பாறையைச் சேர்ந்த அசோக் குமார் சந்திரசேகர் சகோதரரான இருவரும் சேர்ந்து சிவக்குமார் என்பவரின் தந்தை நாகராஜன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தனர். இந்த கொலைக்கு பழி வாங்குவதற்காக அசோக்குமாரை தாக்கினர். இதில் அசோக்குமார் படுகாயம் அடைந்தார்.

News February 8, 2025

டாஸ்மார்க் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

image

வள்ளுவர் நினைவு தினத்தையொட்டி வரும் 11ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, மதுபானக்கடைகள் (FL1), அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ்மன்றங்கள் (FL2) மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் (FL3) ஆகியவை அன்றைய நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

News February 7, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

error: Content is protected !!