India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் L&T ஷிப் பில்டிங் நிறுவனம் சார்பில் ITI தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக வரும், 18ம் தேதி, திருப்பூர் அரசு ஐ.டி.ஐ.யிலும், 19ம் தேதி உடுமலை ஐ.டி.ஐ. மையத்திலும் நேர்காணல் நடக்கிறது. இதில் எலக்ட்ரிக்கல் & மெக்கானிக் பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில், பெற்றோர்கள் நேரில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.02.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய ஊர்களில் இரவு ரோந்து அலுவல் விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு எண் 100ஐ அழைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரணம்பட்டி அருகே, திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24) என்ற வாலிபர் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த மர்ம நபர்கள், வசந்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வசந்த, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியர் மாணவ, மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தையல் தொழில் செய்து வரும் இவர், 12வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் படி கோவிந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை நேற்று நேரில் சந்தித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
“பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம், இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு: -1 என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், கடந்த, 2022 -23ம் ஆண்டில், 35 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதியானது. பின், 2023 ஏப்., மாதம் துவங்கி, 2024 மார்ச் இறுதி வரையில், 31,250 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்தது. நடப்பு நிதியாண்டில் திருப்பூரில் ஏற்றுமதி அதிகரித்து, தற்போது வரை 23,637 கோடி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும்.
உடுமலை திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ளது பஞ்சலிங்கேஸ்வரர் கோயில். இங்கு மூலிகை குணமுள்ள பஞ்சலிங்க அருவி, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. மேலும் இங்கு அருவி இருக்கும் இடத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இது தமிழக அளவில் புகழ்பெற்ற கோயிலாக உள்ளது. இந்த அடிவாரத்தில் அமர்ந்து இறைவனை வேண்டினால் நன்மை நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.