India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 16ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை, 0421 -2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்! அதிகம் SHARE பண்ணுங்க!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சஹாதேப் பிடிகா (45) என்பவரை கைது செய்து 8 கிலோ குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ராஜவேல். இவர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தனது தந்தைக்கு செல்ஃபோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் மாத சம்பளம் செலவுக்கு சரியாக இருந்தால், செல்போன் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த ராஜவேல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின், அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், உடுமலை, பல்லடம், அவிநாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி , ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், சேடர்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நிலாக்கவுண்டன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று தாந்தோணி கோபால்சாமி என்பவரின் தோட்டத்தின் அருகில் கரை ஒதுங்கி உள்ளது. இவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை. மார்பின் நடுவே ஆபரேஷன் பண்ணிய பழைய காயத் தழும்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
Sorry, no posts matched your criteria.