Tiruppur

News September 15, 2025

திருப்பூர்: ரயில்வே துறையில் வேலை வேண்டுமா..?

image

திருப்பூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதி கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

திருப்பூரில் துடிதுடித்து பலி!

image

திருப்பூர்: புத்தூர் பிரிவைச் சேர்ந்தவர் கணேசன்(55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் தனது பைக்கில் சந்திராபுரம் சோதனை சாவடி பகுதியில் சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், தூக்கி வீச்சப்பட்டு, படுகாயமடைந்த கணேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(செப்.14) உயிரிழந்தார்.

News September 15, 2025

திருப்பூர்: கணவனை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

image

திருப்பூர்: அங்கேரிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(25). இவர், கணவரை இழந்து மகனுடன் வசிக்கும் 28 வயது பெண்ணுடன் பழகியதில், அப்பெண் கர்ப்பமானார். இதையடுத்து, அந்தப் பெண்ணை பிரவீனின் தாயார் ஏற்க மறுத்துள்ளார். ஆகையால், பிரவீன் தன்னை ஏமாற்றி விட்டதாக அப்பெண் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் தற்போது வடக்கு அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 15, 2025

திருப்பூர்: குடிநீர் கேட்டு சாலை மறியல்

image

திருப்பூர் சின்னா நகர் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக, குடிநீர் பொதுமக்களுக்கு சீராக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முறையாக குடிநீர் வழங்க கோரி, சின்னாநகர் பகுதியில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

News September 14, 2025

திருப்பூர்: இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 14.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, ஊதியூர், வெள்ளகோயில், குடிமங்கலம், குன்னத்தூர், சேவூர் ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News September 14, 2025

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Officer (FMCG) பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கப்படும். இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News September 14, 2025

திருப்பூர்: இனி வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது எளிது!

image

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 14, 2025

திருப்பூர்: இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

image

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

News September 14, 2025

திருப்பூரில் காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை

image

திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் காசிமாயன். இவருடைய மகள் நிர்மலா. இவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது வாலிபரை காதலித்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, வேறு ஒரு நபருடன் திருமணத்திற்கான வேலைகளை செய்துள்ளனர்‌. இதனால் மனவேதனை அடைந்த நிர்மலா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News September 14, 2025

திருப்பூரில் அடுத்தடுத்து சம்பவங்கள்!

image

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

error: Content is protected !!