India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுக்காவில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகர் மன்ற தலைவர் சூர்ய பிரகாஷ், நகராட்சி ஆணையர் பால்ராஜ், காங்கயம் திமுக நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் தலா ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் 4 பயனாளிக்களுக்கு ரூ.26 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் சலவைப்பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://nabfins.org/Careers/ இந்த லிங்கை அணுகவும். SHARE பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகேயுள்ள பேரநாய்க்கன்வலசு கிராமத்தில், ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகளை, வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயி குமார், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை.

திருப்பூர்: காங்கேயம் அருகே அரசம்பாளையம் தேங்காய் களத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சாபூர்அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகன் நேற்று(செப்.14) அப்பகுதியில் விளையாடிய போது, கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூர்: இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் சுஜித்ரா. தனியார் பள்ளி ஆசிரியரான இவர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்கள் பேசாமல் இருந்துள்ள நிலையில், காதலன் பேசாததால் மன வேதனையுடைந்த சுஜித்ரா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூர் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.