Tiruppur

News September 20, 2025

திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image

திருப்பூரில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே துறையுடன் இணைந்து, தபால் நிலையத்தின் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு பெறும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் காந்தி நகர் தபார் நிலையத்தில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, இதன் மூலம் தட்கல் முன்பதிவு சேவைகளை எளிதாக பெறமுடியும். மேலும் விபரங்களுக்கு 0421 – 2486288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News September 20, 2025

திருப்பூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News September 20, 2025

திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி APPLY NOW

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படவுள்ளது. 28 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 20, 2025

திருப்பூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள, Office Assistant, உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News September 20, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், கரட்டங்காடு, அரசு மருத்துவமனை, தாராபுரம் ரோடு, தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கவுண்டம்பாளையம், மங்களம் ரோடு சபாபதிபுரம், வாலிபாளையம், காதர்பேட்டை, செட்டிபாளையம், பழ வஞ்சிபாளையம், பூம்புகார், ஆட்சியர் அலுவலக வளாகம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News September 20, 2025

உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆறுதல்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மகளிர் பள்ளியைச் சேர்ந்த புவனேஸ்வரி இன்று வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் இந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக மாணவி உடல் வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் இன்று புவனேஸ்வரியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

News September 19, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்

News September 19, 2025

மாவட்ட காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம்,உடுமலை, அவினாசி,பல்லடம், தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்

News September 19, 2025

திருப்பூர் மக்களே இனி எளிதாகிறது!

image

பொதுமக்களின் பயண வசதிக்காக ரயில்வே துறையுடன் இணைந்து ரயில் பயணிகள் முன்பதிவு சேவை இந்திய அஞ்சல் துறை மூலம் திருப்பூர் காந்தி நகரில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, தக்கல் முன்பதிவு சேவைகள் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பகுதி பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

திருப்பூர் கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் உறுதிமொழி

image

திருப்பூர்: தூய்மை மிஷன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.‌ அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாடாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மாவட்ட கலெக்டர் , மாநகராட்சி ஆணையாளர் , மேயர் உள்ளிட்டோர் தூய்மை பாரத இயக்கம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

error: Content is protected !!