Tiruppur

News September 25, 2025

திருப்பூர் அருகே அரிவாள் வெட்டு பரபரப்பு சம்பவம்

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி கிராமம், நத்தக்காட்டுவலசை சேர்ந்தவர் சோமு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் மீண்டும் சண்டை வரவே ஆத்திரம் அடைந்த தங்கராஜ் விவசாயி சோமுவை அறிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து முதியவர் தங்கராஜை காங்கேயம் போலீசார் கைது செய்தனர்.

News September 25, 2025

திருப்பூர்: நீங்க B.E – ஆ? இந்தியன் வங்கி வேலை ரெடி!

image

திருப்பூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <>கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.கிளிக்

News September 25, 2025

திருப்பூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

News September 25, 2025

திருப்பூர்: இனி பிரச்னையா..? CM Cell-ஐ அணுகவும்!

image

திருப்பூர் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே<> க்ளிக்<<>> செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். உடனே SHARE

News September 25, 2025

திருப்பூரில் 119 பேர் உயிருடன் இல்லை அதிர்ச்சி தகவல்!

image

திருப்பூர், தமிழக அரசு சார்பில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி ரேஷன் பொருள் வினியோகிக்கும் தாயுமானவர் திட்டம் நடைமுறையில் உள்ளது. திருப்பூரில் இந்த திட்டத்தில் 71 ஆயிரத்து 371 பேர், பயனாளிகளாக சேர்க்கப்பட்டு ஆக., மாதம், 49 ஆயிரத்து 36 பேர் ரேஷன் பொருள் பெற்றுள்ளனர், 22 ஆயிரத்து 335 பேர், பொருட்கள் பெறவில்லை. பொருள் பெறாதோரில், 119 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 25, 2025

திருப்பூர் மாநகரில் நுழைய அதிரடி தடை

image

திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கருப்பையா. இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், கருப்பையா மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் நுழைய ஓராண்டு தடைவிதித்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

News September 25, 2025

திருப்பூரில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது

image

திருப்பூர் செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை, மளிகை கடைக்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டு சென்றபோது காணவில்லை என மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜான் கென்னடி என்பவர், இருசக்கர வாகனத்தை திருடியது கண்டறியப்பட்டு, அவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News September 24, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 24.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News September 24, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணாநகர், லட்சுமி நகர், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், குன்னாங்கல்பாளையம், திருமலை நகர், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், ஆவரம்பாளையம், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News September 24, 2025

திருப்பூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!