India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, திருப்பூரில் வேலைக்கு சேரந்துள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து வந்த ரகுமான், சுலைமான், மானிக்ஹுசேனை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மாநகராட்சியோடு இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து நகராட்சிகளில் இணைக்கும் பஞ்சாயத்துகளின் பெயர்களும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் பல்லடம் நகராட்சியில் புதிதாக வடுகபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், மாணிக்காபுரம் ஆகிய பஞ்சாயத்துகள் பல்லடம் நகராட்சியில் இணையப் போவதாக பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக கணபதி நகர் பகுதியில் உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய வழக்கில் இந்து அமைப்பைச் சேர்ந்த அண்ணாச்சி சதீஷ் , கார்முகிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேற்றூ உத்தரவிட்டார்.
தாராபுரம் நகராட்சியுடன் அதனை ஒட்டி அமைந்துள்ள கவுண்டச்சி புதூர், நஞ்சியம் பாளையம் ஆகிய 2 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்கான பட்டியல் தாயார் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 ஊராட்சிகளும் இணைக்கப்படும் போது நகராட்சி வார்டு எண்ணிக்கை கூடுதல் ஆகும் என்றும் தெரிகிறது.
கோவை மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள், உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருப்பூரில் நடைபெற்றது. இதில்அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு தமிழக அதிகாரிகள் அடங்கிய குழுவினை அமைத்து சுமுக தேர்வு காணப்பட வேண்டும்” என்றார்.
திருப்பூர் மாவட்ட முழுவதும் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் வடக்கு பகுதியில் 11 மி.மீ, குமார் நகரில் 42 மி.மீ, தாராபுரத்தில் 64 மி.மீ, உப்பாறு அணைப்பகுதியில் 56 மி.மீ, குண்டடத்தில் 20 மி.மீ, உடுமலையில் 20 மி.மீ., பல்லடத்தில் 41 மி.மீ என மாவட்டம் முழுவதும் 427.20 மி.மீ. மழை பதிவானது.
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் 12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் கிறிஸ்துராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த மயில்சாமி திருப்பூர் தெற்கு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் தெற்கு தாசில்தார் மோகன் காங்கேயத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பூர், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக அலங்கியம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக அலங்கியம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏ.இ.பி.சி.(ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்)
சார்பில், திருப்பூரில் ‘ஆடைத் தொழிலுக்கான ஏற்றுமதி நிதி மற்றும் வர்த்தக வசதி’ கருத்தரங்கு திருமுருகன்பூண்டியில் இன்று நடந்தது. ஏஇபிசி தென் பிராந்திய பொறுப்பாளர் ஏ.சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். இதில் கோவை இணை இயக்குநர் ஆனந்த் மோகன் மிஸ்ரா, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.