Tiruppur

News October 2, 2024

காந்திக்கு மரியாதை செலுத்திய திருப்பூர் ஆட்சியர்

image

மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா காந்தி ஜெயந்தி விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள கதர் அங்காடியில் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு விற்பனையையும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

News October 2, 2024

திருப்பூரில் கொட்டித் தீர்த்த கனமழை

image

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு பகுதியில் 67.4 மில்லி மீட்டர், திருப்பூர் தெற்கு பகுதியில் 40 மில்லி மீட்டர், அவிநாசியில் 17 மில்லி மீட்டர், தாராபுரத்தில் 72 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 291.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2024

இரண்டு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

image

உடுமலையில் குடிநீர் விநியோகம் செய்யும் முதலாவது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதாலும் நாளை 02.10.2024 (ம) 03.10.2024 இரண்டு நாட்களுக்கு நகர்பகுதி வார்டு 12, 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 25 மற்றும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

திருப்பூரில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்

image

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரண்மனை புதூர் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் என்று நடைபெற்றது. 5 முதல் 17வயது வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் இன்று 60பேர் கலந்து கொண்டு தங்கள் கண் கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாற்றிக் கொண்டனர்.

News October 2, 2024

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

image

திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளர் ராம்குமார். கடந்த 2021ஆம் ஆண்டு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு மகிளா நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

News October 1, 2024

திருப்பூரிலிருந்து துணை முதல்வருக்கு வாழ்த்து

image

தமிழகத்தின் துணை முதல் அமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் சென்னை குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News October 1, 2024

திருப்பூரில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர்

image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்.2) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் சார்ந்த மதுபான கூடங்கள், பார்கள் மற்றும் மன மகிழ் மன்றங்கள் ஆகியவற்றை மூட வேண்டும். மது விற்பனை நடைபெறக் கூடாது. இதனையும் மீறி மது விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

News September 30, 2024

அமைச்சர்-திருப்பூர் மாநகர செயலாளர் சந்திப்பு

image

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை திருப்பூர் வடக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகர மேயரும் தினேஷ் சென்னையில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உடன் திருப்பூர் மாநகர திமுக முக்கிய நிர்வாகிகள் & பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து கொண்டனர்.

News September 30, 2024

திருப்பூர்: ‘முக்கிய’ அமைச்சருடன் மேயர் சந்திப்பு

image

மீண்டும் புதிதாக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பதவியேற்றியுள்ள செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர திமுக கட்சியினர் பொறுப்பாளர்கள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News September 30, 2024

திருப்பூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.