India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

திருப்பூர்: ஆண்டிபாளையம் அருகே திருமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி(51). இவருக்கு மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரைப் பிரிந்த மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், அவரது வீட்டிலேயே அவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர்: காங்கேயம் அருகே பொத்தியபாளையம், முத்துக்காளிவலசைச் சேர்ந்தவர் முருகேஷ் (45). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(அக்.11) அவரது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த திலிப் உர்மா என்ற நபரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

பல்லடம் அருகே கணபதிபாளையம் சிந்து கார்டன் பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீஸாருக்கு வந்த தகவலால் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது மனைவி மரி யம் பீவி (39), கரைப்புதூர் தொல்காப்பியன் (19), மதுரை கிஷோர், தெல்லை சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

போத்தனுார் – சென்னை (எண்:06044) இடையே தீபாவளி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 19ம் தேதி இரவு, 11:20 க்கு போத்தனுாரில் புறப்படும் ரயில், நள்ளிரவு, 12:10 க்கு திருப்பூர் வரும்;மறுநாள் காலை, 8:45க்கு சென்னை சென்று சேரும்.மறுமார்க்கமாக, 22ம் தேதி மதியம் 12:15 க்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு, 10:00 மணிக்கு போத்தனுார் வந்தடையும். இரவு, 8:00 மணிக்கு திருப்பூரை கடக்கும்.

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வெல்டிங், பேப்ரிகேஷன் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. பயிற்சியில் 18 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க வங்கிக்கடன் மற்றும் மானியக்கடன் பெற ஆலோசனை வழங்கப்படும். தொடர்புக்கு 94890 43923 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

திருப்பூர் மக்களே, இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
Sorry, no posts matched your criteria.